×

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்; மக்கள் வேதனை..!!

சென்னை: கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மாண்டஸ் புயலால் சென்னையை அடுத்துள்ள ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது. நீர்வரத்து அதிகரித்ததால் கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தி ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஊரப்பாக்கம், ஜெகதீஷ் நகர்,செல்வராஜ் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட  பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்தது. 3 நாட்களாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சன் நியூஸில் இது தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த ஆண்டை விட பாதிப்புகள் குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர், புவனீஷ்வரி நகரில் தெருக்களில் ஆறு போல மழை நீர் ஓடுகிறது. சுமார் 20 குடியிருப்புகளை மழைநீர் சூழ்துள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்….

The post சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்; மக்கள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Urpakkam ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...