×

மாண்டஸ் புயலால் முடங்கிய டெல்டா மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

நாகப்பட்டினம்: வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த 4ம்தேதி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 25 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஒரு வாரமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடல் சீற்றம் குறைந்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி அளித்து டோக்கன் வழங்கியது. இதையடுத்து நேற்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள், 3 ஆயிரம் பைபர் படகுகளில் 35 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் பழையாறு, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் இருந்து 3,000 விசைப்படகு, 5,000 பைபர் படகுகளில் 10,000 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். காரைக்கால் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300 விசைப்படகுகள், 700 பைபர் படகுகளில் 20 ஆயிரம் மீனவர்கள், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்து 200 பைபர் படகுகளில் 6,000 மீனவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 150 விசைப்படகுகள், 600 நாட்டு படகுகளில் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்….

The post மாண்டஸ் புயலால் முடங்கிய டெல்டா மீனவர்கள் கடலுக்கு சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Mandes ,Nagapattinam ,Mandas storm ,Bengal Sea ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...