×

டெல்லி மதுபான ஊழல் வழக்கு கவிதாவிடம் சிபிஐ விசாரணை

ஐதராபாத்: டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். டெல்லியில் மதுபான கொள்கையில் மோசடி நடந்ததாக அம்மாநில துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. இந்த வழக்கில் பல தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த விவகாரம் தொடர்பாக ரூ.100 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியுமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, ஐதராபாத்தில் உள்ள கவிதா வீட்டிற்கு நேற்று காலை 11 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அங்கு மாலை 6.30 மணி வரை விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், கவிதாவின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து கவிதாவின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது….

The post டெல்லி மதுபான ஊழல் வழக்கு கவிதாவிடம் சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Tags : CPI ,Kavidah ,Delhi ,Hyderabad ,CBI ,Telangana ,Chief President ,Chandrasekara ,Kavitha ,Kavieta ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...