×

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: வாழ்வாதாரம் கேள்விக்குறி என உள்ளூர் தொழிலாளர்கள் புலம்பல்

கும்பகோணம்: தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்தில் கட்டுமானம் மற்றும் பெயிண்டிங் தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் கட்டுமானம், பெயிண்டிங், பின்னலாடை உள்ளிட்ட பல துறைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுப்பட்டு குறித்து விவாதிக்கப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது பற்றி கவலை தெரிவிக்கப்பட்டது. வெளிமாநிலத்தவர்களால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறைந்தபட்ச ஊதியமே வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில் அவர்களின் வருகையை வரன்முறைப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை தென்னிந்திய தொழில் துறையினரிடம் வலுப்பெற்றுள்ளது.    …

The post தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நாளுக்குநாள் அதிகரிப்பு: வாழ்வாதாரம் கேள்விக்குறி என உள்ளூர் தொழிலாளர்கள் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kumbakonam ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...