×

சூறாவளிக்காற்றால் தடைபட்ட மின் சேவை சீரானது

சென்னை: ‘மாண்டஸ்’’ புயலின் அதிவேக சூறாவளிக்காற்றால் தடைப்பட்ட மின்சாரம் சீரானது. வழக்கம்போல் சென்னையில் 2178 மெ.வாட் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்ததாக மின்சாரத்துறை மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ட்வீட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரத்துறை சார்பாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 10 துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் 622 பீடர்களில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் வரை நள்ளிரவு தடைப்பட்ட மின் விநியோகம் நேற்று மாலை முழுவதுமாக சரி செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் நிறுத்தப்பட்ட மின் சேவை மாலை 5.30 மணியளவில் 2,178 மெகாவாட் மின்சாரம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்….

The post சூறாவளிக்காற்றால் தடைபட்ட மின் சேவை சீரானது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mantus ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!