×

சமந்தா ஜோடியாக உன்னி முகுந்தன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்துள்ளார்.  இதையடுத்து மீண்டும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ‘யசோதா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஹரி, ஹரீஷ் சங்கர் இயக்குகின்றனர். ‘சாகுந்தலம்’ படத்தில் சமந்தா ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். ‘யசோதா’ படத்தில் சமந்தா ஜோடியாக மலையாள நடிகரும், பாடகருமான உன்னி முகுந்தன் நடிக்கிறார்.

தமிழில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான ‘சீடன்’ படத்தில் நடித்திருந்த உன்னி முகுந்தன், சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘பாஹமதி’ படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தார். தற்போது சமந்தா ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா ேஜாடியாக நடிக்கின்றனர்.

Tags : Samantha ,Unni Mukundan ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா