×

குத்துப்பாடலுக்கு சமந்தா ஆட்டம்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரீஷ்  உத்தமன், கிஷோர் நடித்துள்ள 2 பாகங்கள் கொண்ட படம், புஷ்பா.  தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். செம்மரக்கடத்தல் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதன் முதல் பாகத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு சமந்தா நடனமாடுகிறார். ஹீரோயினாக நடித்து வரும் அவர் ஒரு பாடலுக்கு ஆடுவாரா என்று பலர் தயங்கினர். ஆனால், இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் சமந்தாவுக்கு நெருக்கமான நண்பர்கள் என்பதால், அவர்கள் கேட்டவுடனே சம்பளத்தைப் பற்றி கவலைப்படாமல் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு சமந்தா ‘கேர் ஆப் சத்தியமூர்த்தி’ என்ற படத்தில் அல்லு அர்ஜூனுடன் நடித்திருந்தார்.

Tags : Samantha ,
× RELATED பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா