×

தேனிகாரர் பரிவட்டம் கட்டியதால் பழங்குடியினர் உச்ச கோபத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பவர்புல் பெண்மணி இருக்கும் மாநிலத்தில் என்ன தான் நடக்குது… தாமரையின் முக்கிய தலைவர் ரொம்பவே கோபப்பட்டாராமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் உள்ள பிரபலமான தலைவரின் மணிமண்டபத்தில், தாமரை கட்சியின் முதன்மையானவரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை, தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதுவையை குத்தகை எடுத்துள்ள பக்கத்து மாநிலத்தை சேர்ந்த தாமரைக்கட்சியின் ஒன்றிய அரசில் பவர் புல்லாக இருக்கும் திருத்தணி கடவுள் பெயர் கொண்டவர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்தராம். மேலும், இந்நிகழ்ச்சியை புதுச்சேரி அரசு சார்பில் ஏற்பாடு செய்ததால் பவர்புல் பெண்மணி, புல்லட்சாமி மற்றும் அவரது படை பரிவாரங்கள் கலந்து ெகாண்டாங்க. காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் 12 மணிக்கு மேல் தான் நிகழ்ச்சி தொடங்கியதாம். என்ன என்று விசாரித்தால், அரசு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதற்கு தயார் நிலையில் இருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இல்லாமல் பெரும்பான்மையான சேர் காலியாக இருந்ததாம். இதனை கேள்விப்பட்ட ஒன்றிய விஐபி ஆத்திரமடைந்து நிகழ்ச்சியில் யாரும் இல்லாமல் எப்படி கலந்து கொள்வது என்று கூறி டோஸ் விட்டாராம். உடனடியாக ஆட்களை கூட்ட வேண்டும் என்று தாமரை எம்எல்ஏகளுக்கு ஓலை பறந்ததாக சொல்றங்க. உடனே நிகழ்ச்சி நடக்கும் பகுதி மற்றும் பக்கத்து தொகுதி ஆகியவை தாமரைக்கட்சி மக்கள் பிரதிநிதி தொகுதி என்பதால் உடனடியாக தொகுதி நிர்வாகிகளுக்கு போன் போட்டு தலைக்கு 100 ரூபாய் தருகிறோம் உடனடியாக கூட்டத்தை அழைத்து வாருங்கனு சொன்னாங்களாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் கூட்டம் கூடியது. பிறகு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டாங்க… கரன்சிக்கு குவியும் மக்களை வைத்து ஓட்டு வாங்கி எப்படி ஆட்சியை பிடிப்பது என்று புதுச்சேரி தாமரை தலைகள் டென்ஷனில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா‘‘பழங்குடியின தலைவருக்கு கட்ட வேண்டிய பரிவட்டம் பாலிடிக்ஸ் காரணமாக பறிபோனதை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஹனிபீ மாவட்டத்தில் தர்மயுத்த நாயகர் பிறந்த ஊரான பிக் குளத்துக்கு பக்கத்தில் உள் கைலாச சாமிக்கு மலை மேல கோயில் இருக்கு. இந்தக் கோயில் அமைந்திருக்க கூடிய ஊர்ல ஒரு சமூகத்தினர் ஆண்டாண்டு காலமாக கோயிலை நிர்வகிச்சு வந்தாங்க. இந்த கோயிலுக்கு போக கடந்த 20 வருஷத்துக்கு முன்னால இந்த தொகுதியில் எம்பியா இருந்த குக்கர் கட்சி தலைவரானவர், மலை மேல் உள்ள கோயில் வரை ரோடு போட்டு கொடுத்தார். அதுக்கு பின்னால 2011ல் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தர்மயுத்த நாயகரு பல கனிமவள கான்ட்ராக்டர்கள் செலவுல இந்த கோயிலை புனரமைக்க செஞ்சாரு. கனிம வள கான்ட்ராக்டர்கள் மூலமாக புனரமைக்கப்பட்ட கோயிலை, தர்மயுத்த நாயகர் தனது மகன் மூலமாக ஒரு தன்னார்வக் குழுவை ஆரம்பித்து, தன்வசப்படுத்திக்கிட்டாங்களாம். கோயில் இந்து சமய அறநிலைய துறைக்கு வந்த பின்னாலும், கடந்த 10 ஆண்டு காலமாக தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த கோயில் திருவிழா அனைத்திலும் தர்மயுத்த நாயகர் குடும்பமே முக்கியத்துவம் பெற்று வந்ததாம். கார்த்திகை தீபத் திருவிழாவுல தீபம் ஏத்துறது கூட நாங்க தான் ஏத்துவோம்னு பல ஆண்டுகளாக அதிகாரம் செலுத்துனாங்களாம். இப்ப ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் அறநிலையத்துறை அனுமதியே இல்லாம தர்மயுத்த நாயகர் மகன் தலைமையில இயங்கக்கூடிய தன்னார்வ குழு தனியாக அழைப்பிதழ் அடிச்சு கோயிலுடைய உரிமையை தன் வசப்படுத்த முயற்சித்தாங்க. இது தெரிஞ்சு, ஆன்மிகவாதிகள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இது தனிநபர் கோயில் இல்லை சொந்தம் கொண்டாட. அரசுக்கு சொந்தமான கோயில். எனவே, ஆகம விதிப்படி தனிநபருக்கு அங்கீகாரம் கொடுக்காமல் தீபத் திருவிழாவை நடத்தணும்னு கேட்டுக்கிட்டாங்க. கார்த்திகை தீபத் திருவிழா அன்று பிக் குளம் தொகுதி எம்எல்ஏ கலந்துக்கிட்டாரு. ஆனா தர்மயுத்த நாயகர் மகனுக்கு ஆதரவாக அதிகாரிகள் சிலர் செயல்பட்டு தொகுதி எம்எல்ஏவுக்கு கூட பரிவட்டம் கட்டாமல் தர்மயுத்தம் நாயகர் மகனுக்கு பரிவட்டம் கட்டி சினிமாவுல சொல்ற மாதிரி ஒரு கோயில குடும்பச் சொத்தா மாற்றுவதற்கு முயற்சி பண்ணிட்டாங்க. விழாவுல ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு பரிவட்டம் கட்டுவதற்கு தடையாக தர்மயுத்தம் நாயகரின் மகனும் அவரைச் சார்ந்தவங்களும் செயல்பட்டுவிட்டார்கள் என்று விழாவில் கலந்து கொண்ட பழங்குடியின பக்தர்கள் மத்தியில் வேதனை குரல்கள்தான் ஒலிக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சஸ்பெண்ட் நடவடிக்கையால, பயத்துல இருக்கும் அதிகாரிகளை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல, பல்வேறு பணிகள் நடந்து வருது. இதுல குறிப்பாக, பாதாள சாக்கடை, சிமென்ட் சாலை, தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருது. இந்த பணிகளை கவனிக்க வேண்டிய அதிகாரிங்க, கடந்த ஆட்சியில சாலைகளின் தரத்தை ஆய்வு செய்யாம இருந்துட்டாங்க. இந்நிலையில் சாலைகளோட தரத்தினை ஆய்வுசெய்ய, மாநகராட்சிகள்ல ஆய்வு தொடங்கியிருக்குது. அதேபோல் வெயிலூர் சிட்டி ஜோன் 4க்கு உட்பட்ட அரியூர் பகுதியில, தார்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக சொல்றாங்க. தாருடன் ஜல்லி கற்கள் உதிரி, உதிரியாக போகுதாம். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளி கீழே கொட்டி, அதை வீடியோவாக பதிவு செஞ்சிருக்காங்க, அதோட தரமற்ற சாலை குறித்து புகாரும் தெரிவிச்சிருக்காங்க. உடனடியாக ஆய்வு செய்த ஆணையர், பணியை சரிவர ஆய்வு செய்யாத உதவி பொறியாளரை, மேயரோட அறிவுறுத்தல் பேர்ல அதிரடியாக சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. இந்த சஸ்பெண்ட் விஷயம் மற்ற அதிகாரிங்களையும் கதிகலங்க வெச்சிருக்குது. இந்த சஸ்பெண்ட் இத்தோட முடியலையாம். இன்னும் தொடரும்னு மாநகராட்சியிலயே பரபரப்பாக பேசிக்கிறாங்க. அடுத்து யார் தலை உருல போகுதோன்னு, மடியில கனம் உள்ளவங்க பயத்துல இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post தேனிகாரர் பரிவட்டம் கட்டியதால் பழங்குடியினர் உச்ச கோபத்தில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Powerbull ,Rombay ,Peter ,Beeacre ,wiki ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...