×

ஹீரோ ஆகிறார் அதர்வா தம்பி

விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. இவர் விஜய்யின் உறவினர். இவரது மகள் சினேகா பிரிட்டோ. இவர் சட்டம் ஒரு இருட்டறை 2ம் பாகம் படத்தை இயக்கி உள்ளார். சினேகாவும், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆகாஷ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குனர்  விஷ்ணுவர்தன் படத்தை இயக்கலாம் என்று தெரிகிறது. விஷ்ணுவர்தன் தற்போது ஷேர்ஷா என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு ஆகாஷை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

Tags : Atherva Tambi ,
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்