×

விவேக் ஓபராய்க்கு போலீஸ் அபராதம்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்க்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விவேக் ஓபராய். இந்தியில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனது மனைவியுடன் பைக்கில் சென்றார். அப்போது அவர் ஹெல்மட் அணியவில்லை. இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்து மும்பை சாந்தாகுரூஸ் போலீசார் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். ஹெல்மட் அணியாமல் சென்றதால் அவருக்கு இந்த அபராதத்தை விதித்திருப்பதாக தெரிவித்தனர். தனது செயலுக்கு விவேக் ஓபராய் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags : Vivek Oberoi ,
× RELATED ரூ.100 கோடி செலவில் உருவாகும் லூசிஃபர் 2