×

கீர்த்தி சுரேஷ் - அனிருத் காதலா?

கீர்த்தி சுரேஷுடன் இசையமைப்பாளர் அனிருத் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் வெளிவந்தன. இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம், ரெமோ படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக இசையில் ஆர்வம் கொண்ட கீர்த்தி சுரேஷ், வயலின் வாசிக்க கற்றுக்கொண்டார்.

பிறகு அனிருத் இசையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் வாசித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அனிருத்துடன் அவர் டேட்டிங்கில் இருப்பதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் இந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் ஆங்கில மீடியா ஒன்றில் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து இரு தரப்பும் பதில் கூறாமல் உள்ளனர்.

Tags : Keerthi ,Suresh - Anirudh Kadala ,
× RELATED மனைவி பிறந்தநாள் கொண்டாட்டம்; மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழப்பு!