×

சொன்னதை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்: டான் படத்தில் இணைந்த சிவாங்கி...!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருகிறார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தில் ஆரம்பித்து தற்போது 2019 ஆம் ஆண்டு வெளியான ஹீரோ படம் வரை தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இதையடுத்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘டான்’ படத்தின் அப்டேட்களும் நாளுக்கு நாள் வந்துக்கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் டான் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூரி, சமுத்திரக்கனி, ப்ரியங்கா மோகன், முனிஷ்காந்த் ஆகியோர் உள்ள நிலையில் RJ விஜய் மற்றும் குக் வித் கோமாளி சிவாங்கி டான் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் விருந்தினராக சென்றிருந்த போது சிவாங்கியை பாராட்டி, சிவாங்கி போல் நடித்தும் காமித்தார். பின்பு குக் வித் கோமாளி செட்டில் இருக்கும் அனைவருடனும் சேர்ந்து வேலை செய்ய ஆசையாக உள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sivakarthikeyan ,Sivanki ,
× RELATED காமெடி பண்றவங்கள UNDERESTIMATE பண்ணாதீங்க! Sivakarthikeyan செம Fun Speech at Garudan Audio Launch.