×

டிஆர்டிஓவில் 1061 காலியிடங்கள்: 10, 12ம் வகுப்பு, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1061 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:1.    Junior Translation Officer: சம்பளம்: ரூ.35,400-1,12,400. 33 இடங்கள் (பொது-29, ஒபிசி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 30க்குள். தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம். இந்தி, ஆங்கிலம் இரண்டிலும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.2.     Stenographer Grade- I (English): சம்பளம்: ரூ.25,500-81,100. 215 இடங்கள் (பொது- 146, ஒபிசி- 40, எஸ்சி-13, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்- 12). வயது: 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன்.3.    Stenographer Grade-II (English): சம்பளம்: ரூ.25,500-81,100. 123 இடங்கள். (பொது-100, ஒபிசி-16, எஸ்சி-6, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.4.     Administrative Assistant (English/Hindi): சம்பளம்: ரூ.19,900-81,100. 262 இடங்கள். (பொது-138, பொருளாதார பிற்பட்டோர்- 24, ஒபிசி-60, எஸ்சி-23, எஸ்டி-17) வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.5.     Store Assistant (English/Hindi): 138 இடங்கள். (பொது-82, பொருளாதார பிற்பட்டோர்-12, ஒபிசி-27, எஸ்சி-11, எஸ்டி-6). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி டைப்பிங்கில் 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.6.     Security Assistant ‘A’: 41 இடங்கள் (பொது-32, பொருளாதார பிற்பட்டோர்- 1, ஒபிசி-7, எஸ்சி-1). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.7.     Vehicle Operator ‘A’: 145 இடங்கள். (பொது-82, பொருளாதார பிற்பட்டோர்- 12, ஒபிசி-29, எஸ்சி-12, எஸ்டி-10). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.8.     Fire Engine Driver ‘A’: 18 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்- 2, ஒபிசி-3). சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: Fire Engine டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.9.     Fireman: 86 இடங்கள் ( பொது-57, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-19, எஸ்சி-5, எஸ்டி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.டிஆர்டிஓ வால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் முதற்கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.www.drdo.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.12.2022.

The post டிஆர்டிஓவில் 1061 காலியிடங்கள்: 10, 12ம் வகுப்பு, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : DRTO ,Indian Military Research and Development Centre ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!