×

அஜித்தை கவர்ந்த தெலுங்கு படம்...!

தெலுங்கில் வெளியாக உள்ள ஒரு படத்தின் டீசரை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் அஜித். இதே மா கதா என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படம் உருவாகியுள்ளது. சுமந்த் அஸ்வின், தன்யா ஹோப், பூமிகா நடித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் ராம் பிரசாத், அஜித்தின் நண்பர். சமீபத்தில் அஜித்தை சந்தித்த அவர், இதே மா கதா படத்தின் டீசரை அவருக்கு காண்பித்தார். இந்த படத்தில் பைக் ரேஸர் வேடத்தில் ஹீரோ சுமந்த் அஸ்வின் நடித்துள்ளார்.

டீசரை பார்த்துவிட்டு அஜித் கூறும்போது, ‘ராம் பிரசாத் எனது நெருங்கிய நண்பர். அவர் உருவாக்கியுள்ள இந்த படம், பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு பைக் ரைடிங் பிடிக்கும். படத்திலும் பைக் ரைடிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. டீசரில் அந்த காட்சிகளை பார்த்து சந்தோஷப்பட்டேன். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும்’ என்றார்.

Tags : Ajith ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்