விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும். எனவே, அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு, 13வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாபி பாடகர் திலிஜித் தோசான்ஜின் பதிவை பகிர்ந்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ‘’உண்மையிலேயே நம் விவசாயிகள்தான் இந்தியாவின் போர் வீரர்கள். அவர்களின் பயத்தைப் போக்கி, அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் வசிக்கும் நாம், விவசாயிகள் பிரச்னை உடனடியாக சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், நடிகை பிரீத்தி ஜிந்தா வெளியிட்டுள்ள பதிவில், ‘’கடுமையான குளிரிலும், கொடூரமான கொரோனா தொற்றுக்கு இடையிலும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் எனது அன்பு உரித்தாகட்டும். இந்திய தேசத்தையே இயங்க வைக்கும் நமது மண்ணின் போர் வீரர்கள் அவர்கள்’’ என்றார்.

Related Stories:

>