×

இந்த ஆண்டில் அதிகமாக பகிரப்பட்ட விஜய்யின் செல்பி: டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது, தனது ரசிகர்களுடன் இணைந்து நடிகர் விஜய் எடுத்து வெளியிட்ட செல்பி, இந்த ஆண்டில் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது என்று, டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அப்போது விஜய்யை பார்க்க பெரும் கூட்டம் கூடியது. ஷூட்டிங்கில் இருந்த பஸ் மீது ஏறி நின்ற விஜய், ரசிகர்கள் கூட்டத்துடன் இணைந்து செல்பி எடுத்தார். அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. தற்போது இந்த செல்பிதான் டிவிட்டரில் இந்திய அளவில் அதிகமாக ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது என்று டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செல்பி, இதுவரை ஒரு லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை ரீடிவிட் செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பிரிவில் அமிதாப் பச்சன், விஜய், பிளாக் பேந்தர் சாட்விக் போஸ்மேன் ஆகியோரை பற்றிய டிவிட்டுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

சினிமாவை பொறுத்தவரை, தேசிய அளவில் தில்பேச்சாரா படத்தை பற்றிய ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யாவின் சூரரைப் போற்று, மகேஷ்பாபுவின் சரிலேரு நீக்கெவரு பட ஹேஷ்டேக்குகள் உள்ளன. கடந்த ஜூலை மாதம் அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியிட்ட டிவிட், இந்த வருடம் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டு ரீ-டிவிட் செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய் காரணமாக திடீரென்று மரணம் அடைந்த பிளாக் பேந்தர் ஹீரோ சாட்விக் போஸ்மேன் மரணத்தை பற்றிய டிவிட்டும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

Tags : Vijay ,company announcement ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...