×

பெனூமூர் அடுத்த கங்குப்பள்ளி கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர் : பெனூமூர் அடுத்த கங்குப்பள்ளி கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று பெனூமூர் அடுத்த கங்குப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு அருகே உள்ள சுடுகாடு நிலத்தை பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால், எங்கள் கிராமத்தை சேர்ந்த பக்தவச்சலம், சின்னையா மற்றும் ஜெயராம் ஆகியோர் சுடுகாடு செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து கேட்ட கிராமமக்களை தரை குறைவாக பேசி வருகின்றனர். மேலும், பெனூமூர் போலீசில் புகார் அளித்தால் சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மண்டல வருவாய்த்துறை அலுவலகம், கிராம வருவாய்த்துறை அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  தற்போது சாலையை ஆக்கிரமிப்பு செய்ததால் எங்கள் கிராமம் அருகே உள்ள சுடுகாட்டிற்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்யாமல் செல்ல வழி இல்லாமல் சாலையோரத்தில் அடக்கம் செய்தோம். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுடுகாடு ஆக்கிரமிப்பு சாலையை மீட்டு தர வேண்டும். மேலும், 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்ைக எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்….

The post பெனூமூர் அடுத்த கங்குப்பள்ளி கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gangupalli village ,Benumur ,Chittoor ,Benoomur ,Benumur village ,Gangupalli ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்