×

அம்பேத்கர் சிலைக்கு மாலை தஞ்சையில் வி.சி.க-பாஜ மோதல்

தஞ்சை: நாடு முழுவதும் அம்பேக்தரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தஞ்சை நாஞ்சிக்கோட்ைட மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சொக்கா ரவி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பாஜ மாநில துணை பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வந்தனர்.அப்போது, இந்துத்துவா கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் பாஜவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த தகவல் அறிந்ததும் விசிக மற்றும் பாஜகவினரை அழைத்து தஞ்சை டவுன் டிஎஸ்பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால் நாஞ்சிக்கோட்டை சாலையில் கருப்பு முருகானந்தம் தலைமையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

The post அம்பேத்கர் சிலைக்கு மாலை தஞ்சையில் வி.சி.க-பாஜ மோதல் appeared first on Dinakaran.

Tags : VC-Baja ,Thanjavur ,Ambedkar ,Nanchikotida ,VC-Baj ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையம் முன் அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்