×

பழைய கார் விற்பனை கியா புது முயற்சி

பழைய கார்களை விற்பனை வர்த்தகத்தில் கியா நிறுவனம் நுழைந்துள்ளது. ஏற்கெனவே மாருதி சுசூகி நிறுவனம் பழைய கார்களை விற்பனை செய்ய மாருதி சுசூகி ட்ரூ வேல்யூ என்ற விற்பனை நிலையங்களை பல்வேறு நகரங்களில் திறந்துள்ளது. இதுபோல கியா நிறுவனமும் கியா சிபிஓ என்ற பெயரில் பழைய கார் விற்பனை சந்தையில் நுழைந்துள்ளது. பழைய கார்களை விற்பது, வாங்குவது, எக்ஸ்சேஞ்ச் செய்வது என அனைத்தையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம். கியா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றுடன் கார்கள் விற்கப்படும். இதற்கு 2 ஆண்டு மற்றும் 40,000 கிலோ மீட்டர் வாரண்டி, 4 இலவச பராமரிப்புகள் ஆகியவற்றையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. 5 ஆண்டுக்கு மேல் ஆகாத , ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு கீழ் ஓடிய பழைய கார்கள் விற்கப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 30 விற்பனை மையங்களை திறக்க உள்ளதாகவும் நிறுவன தரப்பில் கூறப்படுகிறது….

The post பழைய கார் விற்பனை கியா புது முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kia New ,Kia ,Maruti Suzuki ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...