×

#ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ராக்கிய அஜித்தின் ரசிகர்கள்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதில் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட்டன. அதைத்தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல்கேரியா, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்ட காட்சிகளை இந்தியாவில் நடத்த முடியாது என்பதால் படக்குழு வெளிநாடு சென்று ஷூட்டிங் நடத்தும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்தி என்று தகவல் பரவியதை அடுத்து #ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ராக்கியுள்ளனர்.

Tags : Fans ,Ajith ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்