×

கொச்சி அருகே விபத்து: விஜய் ஏசுதாஸ் உயிர் தப்பினார்

கொச்சி அருகே பாடகர் விஜய் ஏசுதாஸ் கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புகழ் பெற்ற பாடகர் கே.ஜே.ஏசுதாசின் மகன் விஜய் ஏசுதாஸ். இவர் பக்திப் பாடல்கள், சினிமா பாடல்களை ஏராளமாக பாடியுள்ளார். நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு தனது நண்பருடன் விஜய் ஏசுதாஸ் காரில் சென்று கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் ஆலப்புழா அருகே கார் சென்று கொண்டிருந்தது.

துறவூர் அருகே கார் சென்றபோது, குறுக்கு சாலையில் இருந்து மற்றொரு கார் வேகமாக தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியது. இதில் எதிர்பாராத விதமாக அந்த கார், விஜய் ஏசுதாஸ் சென்ற கார் மீது மோதியது. இதில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன. ஆனால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து குத்தியதோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Accident ,Kochi ,Vijay Esudas ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...