பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது

பார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. பார்த்திபன், நடித்து இயக்கி தயாரித்த படம் ஒத்த செருப்பு. கடந்த 2019ல் வெளியானது. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து உருவான படம் இது. இதனால் ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்திய சாதனை புத்தகத்திலும் இந்த படம் இடம்பெற்றது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான இந்தியன் பனோரமா சினிமா விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.

அதன்படி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்பட பல மொழிகளில் சிறந்த படங்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழில் ஒத்த செருப்பு படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு வெளியான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் பெருவெள்ளம் ஏற்படும்போது, 20 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட கணவரை மனைவி பாதுகாப்பது போல் இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>