×

வெண்ணிறப் பட்டில் கௌதம் கார்த்திக் மஞ்சிமா!

பாக்யராஜ்- பூர்ணிமா, அஜித்- – ஷாலினி, சூர்யா-ஜோதிகா… இப்படி எத்தனையோ ரீல் டூ ரியல் ஜோடிகள் சினிமாவில் ஏராளம். இதோ அந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளனர் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஜோடி. நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்’ படம் மூலம் திரைக்கு அறிமுகமானவர். தொடர்ந்து ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜாவை’, ‘ரங்கூன்’ என பல படங்களில் நடித்து வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன், அதற்கு முன் மலையாளத்தில் பல படங்களிலும் திறமை காட்டியர். இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். அந்தப் படத்தில்தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ‘முதலில் காதலைச் சொன்னவர் கௌதம் கார்த்திக் எனவும் இரண்டொரு நாட்கள் கழித்து அவர் காதலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் மஞ்சிமா’ எனவும் கௌதம் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.மூன்று வருடங்கள் காதல் அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்தாலும் ஒரே ஒரு முறை மஞ்சிமா தவிர்த்து இருவரும் அதற்கு பெரிதாக இல்லை என அறிவிப்புகள் கொடுக்கவில்லை. சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி இரு வீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்துள்ளனர். ‘மஞ்சிமா அழகானவர் என்பதை தாண்டி நான் சோர்ந்து போன நாட்களில் எனக்கு ஆறுதலாக இருந்து இருக்கிறார். அதுதான் நான் அவரை காதலிக்க காரணம்’ என பெருமிதமாகக் கூறியிருக்கும் கௌதம் கார்த்திக் நவம்பர் 28ம் தேதி அன்று மஞ்சிமாவை கரம் பிடித்திருக்கிறார். பட்டு வேட்டி, பட்டுச் சட்டையில் கௌதம் கார்த்திக், மற்றும் வெண்ணிறப் பட்டுப் புடவையில் மஞ்சிமா அதற்கு மேட்சிங்காக தங்க நகைகள் என எளிமையான, இயற்கையான அழகுடன் காட்சி கொடுத்தனர். இவர்கள் திருமணத்திற்கு மணிரத்தினம், சிவகார்த்திகேயன், கௌதம் மேனன், அசோக் செல்வன், ஏ.ஆர்.முருகதாஸ், சூரி உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தி இருக்கின்றனர்.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

The post வெண்ணிறப் பட்டில் கௌதம் கார்த்திக் மஞ்சிமா! appeared first on Dinakaran.

Tags : gautam karthic manjima ,Bagyaraj- Purnima ,Ajit- Shalini ,Surya-Jhodika ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை...