கொரோனா பாதிப்பு மனஉளைச்சலில் தமன்னா

தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக சில தினங்களுக்கு முன் மும்பையிலிருந்து ஐதராபாத்துக்கு வந்தார் தமன்னா. படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. காய்ச்சலுக்கான மருந்து எடுத்தும் பயன் தரவில்லை. இதையடுத்து கொரோனோ டெஸ்ட் எடுத்துக்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவல் கேள்விப்பட்டதும் தமன்னா நிலைகுலைந்து போனாராம். வழக்கமாக கொரோனாவால் பாதிக்கப்படும்போது திரையுலகை சேர்ந்தவர்கள், நம்பிக்கையை இழக்க மாட்டார்கள். துணிச்சலாக இருப்பார்கள். குறிப்பாக கொரோனா பாதிப்புக்குள்ளான இளம் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் போராடி கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

ஆனால் தமன்னா விஷயத்தில் அப்படி நடக்கவில்லையாம். அவர், மிகவும் பயந்துபோய்விட்டாராம். வழக்கமாக எதுவாக இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார் தமன்னா. அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்ததும், அதையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதற்கு முன் அவரது பெற்றோருக்கு கொரோனா வந்தபோது அதுபோல் அவர் பதிவிட்டு இருந்தார். ஆனால் தனக்கு கொரோனா வந்ததும் அமைதி ஆகிவிட்டார். இதற்கு காரணம், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம். அவருக்கு அதிகமான பாதிப்பு இல்லாவிட்டாலும் பயம் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடிவு செய்தாராம். அதன்படி ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>