அனுஷ்காவின் மாற்றம் கைகொடுக்குமா?

முதலில் இருந்தே மீடியாவிடம் பேசுவதை வெறுத்து வந்தவர், அனுஷ்கா. அவர் நடிக்கும் தமிழ், தெலுங்கு படங்களின்ஆடியோ விழாக்களிலும் கலந்துகொள்வதை விரும்ப மாட்டார். தனியாக பேட்டி கொடுக்கவும் தயங்குவார். காரணம், நாகார்ஜூனா பற்றியோ  அல்லது அவரது மகன் நாகசைதன்யா பற்றியோ கேட்பார்கள் என்ற பயம். ஒருகட்டத்தில் அருந்ததி படம் ஹிட்டானது. அதற்கு பிறகு தனது அணுகு முறையில் லேசான மாற்றம் கொண்டு வந்த அனுஷ்கா, மீடியாவிடம் பேசத் தொடங்கினார். இந்நிலையில் அவரது திருமணத்தைப் பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ஆர்யாவுக்கும், அவருக்கும் நெருக்கம் என்பதாகவும் கூறப்பட்டது. இதனால், மீண்டும் மீடியாக்களை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் பாகுபலி, பாகுபலி 2 மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து, பிரபாஸை அவர் காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் வெளியான தகவல்களால் டென்ஷனான அனுஷ்கா, இனிமேல் பேட்டி வேண்டாம். படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

இந்நிலையில், சைலன்ஸ் படம் பற்றி மீடியாவிடம் பேசிய அவர், தன் திருமணம் குறித்து கேள்விகள் கேட்கக்கூடாது என்று சொன்னார். மேலும், தனி செயலியில் பேசும்போது தன்னை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று, வீடியோவில் தோன்ற மறுத்து, வெறும் ஆடியோவில் மட்டுமே சில கேள்விகளுக்கு பதிலளித்தார். இதுவரை டிவிட்டரில் ரசிகர்களிடம் பேசாத அனுஷ்கா, நேற்று திடீரென்று ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அவரது காலம் கடந்த ஞானோதயத்தை கண்டு பலர் கமெண்ட் செய்தாலும், அவரது திடீர் மாற்றம் மேலும் சில புதுப்பட வாய்ப்புகளை கொண்டு வருமா என்று சிலர் கேட்கின்றனர்.

Related Stories:

>