×

முக்கிய இடங்களில் 400 சிசிடிவி கேமரா கொள்ளை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து திருட்டில் ஈடுபட்டால் ‘குண்டாஸ்’-கோவை மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

சூலூர் : கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்களில் பறிபோன 32 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றிய போலீசார், மூவரை கைது செய்தனர். அப்பநாயக்கன்பட்டி பகுதியில்  திமுக கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் 22 பவுன் தங்க நகைகளும் 1.6 லட்சம் ரூபாய் திட்டு போனது. நீலாம்பூர் அண்ணா நகர் பகுதியில் சந்தியா என்பவரது வீட்டில் 6 பவுன் தங்க நகைகளும், காடம்பாடி பகுதியை சேர்ந்த கோபு என்பவர் வீட்டில் 2 பவுன் தங்க நகைகளும், மயிலம்பட்டி தனம் நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வீட்டில் 2 பவுன் நகைகளும் கொள்ளை போனது. இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராக்களை மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த முபாரக் அலி, பீளமேட்டை சிறந்த ஜெகநாதன் மற்றும் தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் இணைந்து திட்டம் தீட்டி சூலூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். இந்த வழக்கில் முக்கிய துப்பு கொடுத்த மரகதம்  என்ற பெண்ணுக்கு எஸ்.பி. பரிசு வழங்கி பாராட்டினார்.பின்னர் அவர் கூறியதாவது: இதுவரை புறநகர் பகுதியில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 475 குற்றங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 408 குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் தொலைந்து போன செல்போன்கள் 694 சைபர் கிரைம் மூலம் மீட்டெடுக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் தனிப்படை போலீசார் திருட்டு போன 300 சவரன் நகைகளை மீட்டு எடுத்து உள்ளனர். இதில் காரமடை, வடுகபாளையம், பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தும் அடங்கும். இதுவரை 31 வழிப்பறி கொள்ளைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் 400 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் சிறை சென்றுவிட்டு ஜாமீனில் வெளியே வருபவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.  அப்படி தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்களைத்  தனிப்படை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்களில் பறிபோன நகைகளும் விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான தனிப்படைகள் அமைக்கப்படும் பொதுமக்களும் முன்வந்து வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

The post முக்கிய இடங்களில் 400 சிசிடிவி கேமரா கொள்ளை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து திருட்டில் ஈடுபட்டால் ‘குண்டாஸ்’-கோவை மாவட்ட எஸ்பி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore District ,Coimbatore ,Sullur ,
× RELATED முன்னாள் படைவீரர் ‘சார்ந்தோர்...