×

நடிகர்களின் துணிச்சல்

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு, தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சினிமா மற்றும் டி.வி., வெப்தொடர் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், பல படப்பிடிப்புகளில் அரசு அனுமதித்ததை விட குறைவான ஆட்களை வைத்தும், அதிகப்படியான ஆட்களை வைத்தும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. பல நடிகர், நடிகைகள் கொரோனாவுக்கு பயந்து படப்பிடிப்பில் பங்கேற்க தயங்கும் நிலையில், நட்டி என்கிற நட்ராஜ், ‘எனக்கு துணிவுண்டு. மற்றவர்கள்? எனது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. வாழ்க தொழிலாளர்கள். 

இறைவனை காண்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் விஜய் ஆண்டனி, ‘என்னை நம்பி என்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்காகவும், இயக்குனர்களுக்காகவும், பெப்சி தொழிலாளர்களுக்காகவும் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்’ என்று பதிவு வெளியிட்டுள்ளார். இவர்கள் கருத்துக்கு நெட்டிசன்கள் தாறுமாறான கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

Tags : actors ,
× RELATED நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக...