காதலி ஜுவாலா கட்டாவுடன் புது வாழ்க்கை: விஷ்ணு விஷால் தகவல்

காதலி ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த நடிகர் விஷ்ணு  விஷால்,  தங்களது புதிய வாழ்க்கை ஆரம்பித்துவிட்டதாக கூறியுள்ளார்.
வெண்ணிலா   கபடி குழு, குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலையின்னு வந்துட்டா   வெள்ளக்காரன், ராட்சசன் உள்பட பல படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இவர்   தனது மனைவி ரஜினியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.   இதையடுத்து பேட்மின்ட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருகிறார்.   ஜுவாலாவுக்கு நேற்று பிறந்த நாள். 

நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு பிறந்த நாள்   வாழ்த்து தெரிவித்த விஷ்ணு விஷால், ஜுவாலாவுக்கு மோதிரம் அணிவித்தார். இது   பற்றி விஷ்ணுவிஷால் டிவிட்டரில் கூறும்போது, ‘ஜுவாலாவுக்கு பிறந்த நாள்   வாழ்த்துகள். புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். உங்களது அன்பும் ஆசியும்   தேவை. நேர்மறையான எதிர்காலமும் பணி சூழலும் எங்களுக்கு அமைய வேண்டும். நல்ல   குடும்பத்தினர், நண்பர்கள் உடனிருக்கிறார்கள்’ என்றார்.

Related Stories:

>