×

தியேட்டர் திறப்பு ஆலோசனை கூட்டம் தென்னிந்திய திரையுலகம் புறக்கணிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது 
ஆங்காங்கே ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படவே இல்லை. இதையடுத்து இந்திய தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு தியேட்டர் அதிபர் கள் சங்கம், மல்டிபிளக்ஸ் தியேட்டர் அதிபர்கள் சங்கம் உள்பட பல அமைப்பு கள் தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் தியேட்டர்கள் திறப்பது குறித்து  ஆலோசிக்க, மத்திய  உள்துறை அமைச்சகம் வரும் 8ம் தேதி காணொலி வழியாக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதில் கலந்துகொள்ள அதிக திரைப்படங்கள் தயாரிக்காத உத்தரப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநில தியேட்டர் சங்க நிர்வாகிகளை அழைத்துள்ளது. ஆனால், ஆண்டுக்கு 800 படங்கள் வெளியிடும் மற்றும் அதிக தியேட்டர்கள் கொண்ட தென்னிந்திய திரையுலகை புறக்கணித்து இருக்கிறது, உள்துறை அமைச்சகம். இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்பட பல அமைப்பு கள் அதிர்ச்சி மற்றும் கண்டனத்தைதெரிவித்துள்ளன.

Tags : Theater Opening Consultative Meeting South Indian Movie Ignore ,
× RELATED மண்ணாங்கட்டியை முடித்தார் நயன்தாரா