×

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி

சிறுத்தை படத்துக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார், கார்த்தி. இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஹீரோவாக  நடிக்க, ஹீரோயின் தேர்வு நடக்கிறது. இப்படத்தில் கதைப்படி கார்த்திக்கு இரட்டை வேடம். இதற்கு முன்பு சிறுத்தை படத்திலும் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

புதிய படம் திரில்லர் கதையுடன் உருவாகிறது. தற்போது சுல்தான் என்ற படத்தில் கார்த்தி நடிக்கிறார். இதை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கான 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடித்தபடியே, பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karthi ,BS Mitran ,
× RELATED கார்த்தி சொல்றத நம்பாதீங்க! - Arvind swamy Jolly Speech at Meiyazhagan Pre Release Event | Karthi.