×

16 ஆண்டுகளுக்கு பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணையும் படம்

கொச்சி: 16 ஆண்டுகள் கழித்து மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கிறார்கள். டேக் ஆஃப், சியூ சூன், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் அடுத்ததாக இயக்கும் படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. இதில்தான் மம்மூட்டி, மோகன்லால் 16 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கிறார்கள்.

இருவரும் இதற்கு முன் அதிராத்ரம் (1984), அனுபந்தம் (1985), வர்தா (1986), கரியில காட்டு போல (1986), அடிமகள் உடமகள் (1987), ஹரிகிருஷ்ணன்ஸ் (1998), டுவென்ட்டி 20 (2008) ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் அவர்கள் இணையும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

The post 16 ஆண்டுகளுக்கு பிறகு மம்மூட்டி, மோகன்லால் இணையும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mammootty ,Mohanlal ,Kochi ,Mahesh Narayanan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹேமா கமிட்டி அறிக்கை; இத்தனை நாள்...