ரெஜினா மறுப்பது ஏன்?

தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடிக்கும் ரெஜினா, கார்த்திக் ராஜு இயக்கத்தில் இரு தோற்றங்களில் நடிக்கும் படம், சூர்ப்பனகை. இதன் ஷூட்டிங் லாக்டவுனுக்கு முன் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் நடந்தது. இந்நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தற்போது சில நிபந்தனைகளுடன் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கு வர பல நடிகர், நடிகைகள் தயங்குவது போல் ரெஜினா பயப்படுகிறார். கொரோனா தொற்று முழுமையாக ஓய்ந்த பிறகே படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று சொல்லிவிட்டாராம். தனது அழகு மற்றும் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தும் அவர், கொரோனா வைரசுக்கு பயப்பட இதுதான் காரணம் என்று ரெஜினா தரப்பில் சொல்கின்றனர்.

Related Stories: