×

கிளாமருக்கு மாறிய ஆண்ட்ரியா

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என்று கேட்பார்கள். அதுபோலாகி விட்டார் ஆண்ட்ரியா. கைவசம் அதிக படங்கள் இருந்தபோது யாரிடமும் பேச மாட்டார். மீடியா நபர்கள் தொடர்புகொள்வது சிரமம். அவரது மேனேஜர் அதிக சம்பளம் கேட்பதாக சொல்வார்கள். இப்போது ஆண்ட்ரியாவிடம் மாஸ்டர் படத்தை தவிர சொல்லிக்கொள்வது போல் பெரிய படம் இல்லை. லாக்டவுனால் வீட்டிலேயே முடங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட போட்டோசெஷன் நடத்தினார். அந்த கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு, தன்னை புதுமுகம் போல் பில்டப் செய்துள்ளார். கவர்ச்சி போட்டோக்களுக்கு நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் அடிக்கிறார்களே தவிர, அவருக்கு புதுப்படம் கிடைத்த மாதிரி தெரியவில்லை.

Tags : Andrea ,
× RELATED மிஷ்கின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி