×

வத்திராயிருப்பு அருகே சேதமடைந்த ராமச்சந்திராபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திராபுரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து பஜார் வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திராபுரம் ஊராட்சி உள்ளது. ராமச்சந்திரபுரம் பஸ்டாப்பில் இருந்து நந்தவனத்தெரு வழியாக பஜாருக்கு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையிலுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பஜாருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இருப்பதால், இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் இந்த சாலையிலுள்ள பாலத்தில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post வத்திராயிருப்பு அருகே சேதமடைந்த ராமச்சந்திராபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramachandrapuram road ,Vadurayiripa ,Vadruyiru ,Ramachandrapuram ,Bazaar ,Vadiriril ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பு அருகே காட்டு...