×

வத்திராயிருப்பு அருகே காட்டு யானைகளால் மாந்தோப்பு நாசம்-சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மாந்தோப்புகளை நாசம் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.வத்திராயிருப்பு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கான்சாபுரம், அத்திகோயில் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மா, தென்னை, பலா, தேக்கு தோப்புகள் உள்ளன. மலைப் பகுதியிலிருந்து விவசாய நிலத்திற்கு வரும் வனவிலங்குகள் தென்னை, மா, பலா தோப்புகளில் புகுந்து சேதப்படுத்துகின்றன. குறிப்பாக மாங்காய் சீசன் காலங்களில் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்துக்கு வரும் யாணைகள் மாமரங்களை சேதப்படுத்தி மாங்காய்களை ருசி பார்க்கின்றன.இந்நிலையில், அத்திகோவில் பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவரின் மாந்தோப்பிற்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள், 20க்கு மேற்ப்பட்ட மரங்களை ஒடித்து சேதப்படுத்தியுள்ளன. இதனால், அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘யானைகள் மற்றும் வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மலையடிவாரப்பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வத்திராயிருப்பு அருகே காட்டு யானைகளால் மாந்தோப்பு நாசம்-சோலார் மின்வேலி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varuiri ,Vadruyiru ,Western Continuing ,Vatruyiru ,Vatarayiripa ,Varuiril ,Dinakaran ,
× RELATED மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு சதுரகிரி மலையேற தடை-பக்தர்கள் ஏமாற்றம்