லாக்டவுனில் நடித்த ரைசா

திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடிக்கும் படம், சூர்ப்பனகை. இப்படத்தின் ஷூட்டிங் தென்காசி மற்றும் குற்றாலத்தில் நடந்தபோது கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சென்னை திரும்பிய கார்த்திக் ராஜு, உடனே திரில்லர் கதை ஒன்று எழுதினார். சில ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டபோது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து நடிக்க மறுத்தனர். ஆனால், திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையில் கொரோனா தொற்று இல்லை என்பதை அறிந்து, அங்கு முழு படப்பிடிப்பும் நடத்த ஆயத்தமான கார்த்திக் ராஜு, படப்பிடிப்பு குழுவை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க ஏற்பாடு செய்தார். பிறகு திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்தார். ஒரு தாய், மகள், இளைஞன் ஆகியோரை சுற்றி நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை கொண்ட இப்படத்தில் ரைசா வில்சன், ஹரீஷ் உத்தமன், காளி வெங்கட், பாலசரவணன், பேபி மோனிகா நடித்துள்ளனர்.

Related Stories:

>