×

மிஸ்கின் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடி ஆகிறார் ஸ்ருதிஹாசன்?

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

இதனிடையில் மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப் போக, சிம்பு உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். பல வருடங்களாகவே மிஷ்கின் சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இம்முறை அது நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Tags : partner ,Simbu ,Miskin ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar