சரித்திர நாவல்கள் படிக்கும் பிரியா

கொரோனா லாக்டவுனில் கிடைத்துள்ள ஓய்வை தனக்கு உபயோகமாக பயன்படுத்திக் கொண்ட நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். அவருக்கு 2 படங்களுக்கான டப்பிங் இருந்தது. மாஸ்க் அணிந்துகொண்டு குருதி ஆட்டம், பொம்மை ஆகிய படங்களுக்கு பேசி முடித்தார். பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள வீட்டில் ஜிம் அமைத்து, தினமும் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார். யோகாசனம் செய்வது, தியானத்தில் மூழ்குவது, தனது தோழிகளுடன் டி.வியில் கேம் விளையாடிவருவது என்று பொழுதுபோக்கும் அவர், பழைய படங்கள் பார்த்து, ஒவ்வொரு நடிகையும் எப்படி நடித்திருக்கிறார் என்று கவனித்து வருகிறார். ‘சரித்திர நாவல்கள் படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. 

ஆனால், தினமும் படப்பிடிப்புக்கு சென்று வந்ததால் நேரம் கிடைக்கவில்லை. இப்போது லாக்டவுன் காரணமாக நிறைய நேரம் கிடைத்துள்ளதால், ஒவ்வொரு சரித்திர நாவலையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக இயங்குகிறேன். தனிமையில் விழிப்புடன் இருந்தால், கொரோனா தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்’ என்றார் பிரியா பவானி சங்கர்.

Related Stories: