×

தியேட்டர் அனுபவம் ஓடிடியில் கிடைக்காது: மஞ்சிமா

கொரோனா  லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள  நிலையில், 2 தமிழ் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால்,  அப்படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுகுறித்து மஞ்சிமா  மோகன் கூறுகையில், ‘தியேட்டர்களில் கிடைக்கும் அனுபவம்  ஓடிடியில்  கிடைக்காது. விஜய்யின் புதுப்படத்தை ஸ்ட்ரீமிங்கில் பார்க்க  முடியாது  என்பது போல் என்று சொல்லலாம். முதல் நாள், முதல் காட்சியை ரசிகர்களுடன்  அமர்ந்து பார்த்து ரசிப்பது என்பது தனித்துவமானது. சமீபத்தில் ரிலீசான 2  படங்கள்  பெண்களை மையப்படுத்திய கதை கொண்ட படம் என்று சொல்லும் வார்த்தை  எனக்கு பிடிக்கவில்லை. ஹீரோ நடித்திருந்தாலும் கூட ஒரு ஹீரோயினால் ஒரு  படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்.  உதாரணத்துக்கு நானும் ரவுடிதான் படத்தை  சொல்லலாம். நயன்தாரா இல்லாமல் அந்த படம் முழுமை அடையாது.  அதுபோல்,  விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவை பற்றி சொல்லலாம். படத்தின்  கதையே அவரை பற்றியதுதான்’ என்றார்.

Tags :
× RELATED விஷாலின் ரத்னம்