×

விமானத்தில் ரசிகர் அத்துமீறல்: ராதிகா ஆப்தே கோபம்

விமானத்தில் ரசிகர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே கூறினார். சமீபத்தில் ராதிகா ஆப்தே மும்பையிலிருந்து வேறொரு ஊருக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் கூறியது: விமானத்தில் சென்றபோது நல்லா தூங்கிவிட்டேன். முழித்து பார்த்தபோது விமானம் தரையிறங்கி கொண்டிருந்தது. தூக்க கலக்கத்திலேயே எழுந்து நின்றேன். அப்போது என் அருகில் வந்த ரசிகர் ஒருவர், திடீரென அத்துமீறி என் தோளின் மீது கை போட்டு செல்பி எடுக்க முயன்றார். 

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே கையை தட்டிவிட்டேன். தூக்க கலக்கத்தில் எனது முகமும் வாடிப்போயிருந்தது. போட்டோவுக்கு போஸ் தரும் நிலையில் நானில்லை. அந்த ரசிகரை கடிந்துகொண்டேன். ஆனால் தனது செயலுக்காக அந்த நபர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Tags : Radhika Apte ,
× RELATED தமிழில் நடிக்க தயார்: சென்னையில் கேத்ரினா கைஃப் பேட்டி