×

சோனம் கபூருக்கு நெருக்கடி கொடுத்த ரசிகர்கள்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை, அங்குள்ள வாரிசு நடிகர், நடிகைகளின் ஆளுமையை தோலுரித்து காட்டியிருக்கிறது. அனில் கபூர் மகளும், நடிகையுமான சோனம் கபூருக்கு வாரிசு அரசியலால்தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்றும், அவரை போன்றவர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டதன் விளைவாக, அதிக மன அழுத்தம் ஏற்பட்டு சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த சோனம் கபூர், ‘அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நான், என் தந்தையின் மகள். அவரால்தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறேன். விசேஷ சலுகைகளும் கிடைக்கிறது. இதில் அவமானப்பட என்ன இருக்கிறது? சினிமாவில் எனக்கு இப்படியொரு இடத்தை பெற்றுத்தர என் தந்தை கடுமையாக உழைத்துள்ளார். எனவே, அவரது மகளாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார். மேலும், தன்னைப் பற்றி தாறுமாறாக கமெண்ட் செய்தவர்களின் பதிவுகளை வெளியிட்டுள்ள அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றவர்கள் கமெண்ட் செய்வதை தடுத்துவிட்டார்.

Tags : Fans ,Sonam Kapoor ,crisis ,
× RELATED அனைத்து விதமான கிரிக்கெட்...