×

சுஷாந்த் சிங் நினைவாக 150 குடும்பங்களுக்கு மளிகை பொருள் வழங்கிய நடிகை

சுஷாந்த் சிங் ராஜ்புத் நினைவாக 150 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், சானிட்டரி பேட்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார் நடிகை பிரணிதா. சகுனி, மாசிலாமணி, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரணிதா. இவர், ஊரடங்கு சமயத்தில் கூலி தொழிலாளர்கள் குடும்பத்துக்கு உணவு கொடுத்து உதவி வந்தார். பின்னர் வேலூரில் 1500 போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்னர் பெங்களூரில் ஆட்டோ ரிக்‌ஷா பயணம் பாதுகாப்பாக மேற்கொள்ள டிரைவர்களுக்கு திரைகளை அவர் வழங்கியிருந்தார். 

ஆட்டோ டிரைவர்களுக்கு சானிடைசர் ஆகியவற்றையும் வழங்கினார். இப்போது பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவையொட்டி அவரது நினைவாக 150 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களையும் சானிட்டரி பேட்களையும் அவர் வழங்கியுள்ளார். இது பற்றி பிரணிதா கூறும்போது, ‘என்னால் முடிந்த சிறு உதவிகளை நலிந்தோருக்கு செய்கிறேன். சுஷாந்த் சிங் மரணம், பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவரது நினைவாக நல்ல விஷயம் செய்த திருப்தி மனதுக்கு கிடைத்துள்ளது’ என்றார்.

Tags : Actress ,families ,Sushant Singh ,
× RELATED கேன்ஸ் விழாவில் விருது பெற்ற முதல் இந்திய நடிகை அனசுயா சென்குப்தா..!