×

தமிழ் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட பாலிவுட் இயக்குனர்

தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு, தற்போது தமிழில் ஹீரோவாக நடித்து வரும் நட்டி என்கிற நட்ராஜ், பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவரும், பாலிவுட் இயக்குனர் மற்றும் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘பிளாக் பிரைடே’’ படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்தார். பிறகு அவர்கள் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நட்ராஜ் தனது டிவிட்டர் பதிவில், “அனுராக் என்னை மறந்துவிட்டு அர்த்தம் இல்லாமல் பேசுகிறார். 

அவருடன் பணியாற்றியவர்களை கேளுங்கள். அவர் ஒரு முட்டாளன்றி வேறொன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், “நடராஜும், நானும் சினிமாவில் ஒன்றாக வளர்ந்தோம். நான் நினைக்கும் காட்சியை ஒளிப்பதிவாளரிடம் சரியாக விவரிக்க தெரியாதபோது, அவர்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார். அவரது கோபம் நேர்மையானது. என்னை மன்னித்து விடுங்கள் நட்டி” என்று கூறியுள்ளார்.

Tags : actor ,Tamil ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...