×

கலைஞர்களுக்கு உதவி செய்ய 24 மணி நேரம் பாடிய பாடகர்

பிரபல பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, பிறகு அறிந்தும் அறியாமலும், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். விழித்திரு என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். கொரோனா ஊரடங்கு காரணமாக மேடை இசைக்கலைஞர்கள் வேலை வாய்ப்பிழந்து தவிப்பதால், அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், சாதனை இசை நிகழ்ச்சி ஒன்றை இணையதளம் மூலம் நடத்தினார். கடந்த 30ம் தேதி மாலை 7 மணி முதல் 31ம் தேதி இரவு 7 மணி ­­வரை, தொடர்ந்து 24 மணி நேரம் நேரலையாக பாடினார். இதன்மூலம் கிடைத்த நிதியை, வேலை வாய்ப்பிழந்த மேடை இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Tags : singer ,artists ,
× RELATED பாடகி ஆனார் அதிதி