நடிகையை பாடகியாக்கிய கொரோனா

பிரபல தமிழ் நடிகை ஜனனி அய்யர். பாலா இயக்கிய அவன் இவன், தெகிடி, பாகன், தர்மபிரபு, பலூன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தொல்லைக்காட்சி, வெள்ளம், கசட தபற படங்களில் நடித்து வருகிறார். கொரோனா ஊடரங்கின் காரணமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நடிகைகள், ஓவியர்களாக, கதாசிரியர்களாக, மாடல் அழகிகளாக, வீட்டு வேலை செய்பவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வித்தியாசமாக ஜனனி அய்யர் மட்டும் பாடகி ஆகியுள்ளார். சென்னையை சேர்ந்த ஜனனி அய்யர் தான் நடிக்கும் படங்களில் அவர்தார் டப்பிங் பேசுகிறார்.

ஆனால் பாடல் பாடியதில்லை. கொரோன காலத்தில் பாடகி ஆகிவிட்டார். “உன் நெருக்கம்...” எனத் தொடங்கும் பாடலை அவர் பாடியுள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்து உடன் பாடி உள்ளார். ஜனனி அய்யர் பாடலை பாடியதுடன் அதற்கேற்ப நடனம் ஆடி அதனை செல்போனில் படம் பிடித்து தனது இன்ஸ்ட்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “முதல்முறையாக என்னால் முடிந்தளவு முயற்சி செய்து பாடியுள்ளேன். இந்த பாடல் ஸ்கைப் மூலம் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories: