×

இது போலீஸ் வம்சம்!

தயாரிப்பாளர்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். முதல் வகையில் இருப்பவர்கள் நேரடி படங்களைத் தயாரிப்பவர்கள். இரண்டாம் வகையில் இருப்பவர்கள் டப்பிங் படங்களை வெளியிட்டு டப்பு பார்க்கிறவர்கள். அந்த வகையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நட்சத்திரம்’ படம் தமிழில் ‘அசுரவம்சம்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை லட்சுமி வாசந்தி புரொடக்‌ஷன் சார்பாக வெங்கட்ராவ் மற்றும் எஸ் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக  சேலம் சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். இயக்கம் கிருஷ்ண வம்சி.

இதில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். நாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா சாய், தருண் தேஜ், பிரக்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ள ஏ.ஆர்.கே.ராஜராஜா படம் பற்றி பேசினார்... ‘‘மிக அழுத்தமான கதை அம்சத்தோடு உள்ள ஒரு போலீஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்பவர்களுக்கு நல்ல விருந்தாக இந்தப் படம் இருக்கும். கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிஷனுக்கு  போலீஸ் ஆகவேண்டும் என்பது லட்சியம்.

அந்த லட்சியத்தை கமிஷனரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிஷன்  காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறார். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமான பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷனர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷனர் மகனை எப்படி டீல் செய்கிறார் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ஹீரோ எப்படி எதிர்கொள்கிறார் என்பதும் பரபரப்பான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.

படத்தில் இன்னொரு எனர்ஜி பாயிண்டும் இருக்கிறது. இதே சமூக விரோதிகளின் கேஸை எடுத்து நடத்தி இறந்து போன காவல் அதிகாரி அலெக்சாண்டரின் ட்ரஸ்ஸோடு ஹீரோ வேட்டையாடுவது படத்தின் அதகள ஏரியாவாக இருக்கும்.இந்தப்படத்தில் பாடல்கள் பேசப்படும் விதமாக வந்துள்ளன. சே.வரலட்சுமி  மிகச்சிறப்பான பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். முருகானந்தம், வலங்கைமான் முகைதீன், பழமொழி பாலன், சங்கர் நீதிமாணிக்கம், எழிலன்பன் ஆகியோரும் தங்களின் பாடல் வரிகளால் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளார்கள். வசனக் காட்சிகளும் வழக்கமான டப்பிங் பட வசனங்கள் போல் இல்லாமல் கதையை நகர்த்தும் விதமாக இருக்கும்’’ என்றார்.

Tags :
× RELATED அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக...