×

இறங்கி அடிக்கிறார் நந்திதா!

அதிரடி ஆக்‌ஷன் படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது இப்போது ட்ரெண்ட். அத்துடன் பெண்களை மையப்படுத்தி ‘அறம்’, ராட்சசி’ போன்ற படங்கள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளன. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாகக் கொண்டு வெளியாகி வெற்றிபெற்றும் வருகின்றன. இது தமிழ்சினிமாவில் நல்ல மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் நந்திதா ஸ்வேதா ‘IPC 376’ என்ற ஆக்‌ஷன் ஹாரர் படத்தில் நடித்துள்ளார். ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். இந்தப் படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறதாம்.

‘அட்டகத்தி’ படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்துள்ளார்.படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இதில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளாராம். சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளாராம்.விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதாதான் என்ற பேச்சு இந்தப்படம் வந்தபின் இண்டஸ்ட்ரி எங்கும் கேட்கும் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

Tags : Nandita ,
× RELATED மார்ச் 29ல் ரீரிலீசாகும் அழகி