பிரபாஸுடன் ஜார்ஜியா சென்ற நடிகை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பீதி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பாகுபலி நடிகர் பிரபாஸ், முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே ஜார்ஜியா புறப்பட்டு சென்றனர். இருவரும் இணைந்து நடிக்கும் ஜான் என்கிற ஓ டியர் படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கிறது.

அதில் பங்கேற்கவே கொரோனா பயத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கின்றனர். படப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாது போன்ற காரணங்களால் கொரோனாவை எதிர்கொண்டு அதனை தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்படக்குழு சென்றிருக்கிறதாம்.

Related Stories: