திரிஷா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும் ரெஜினா

தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஆச்சார்யா என தலைப்பிட்டுள்ளனர். கொரட்டாலா சிவா இயக்குகிறார். ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விரைவில் இதன் படப்பிடிப்பில் திரிஷா கலந்துகொள்ள இருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட ரெஜினாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

உடனே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். இது பற்றி அவர் கூறும்போது, ‘சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோவின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதும் பெரிய விஷயம்தான். பிரபல நடிகைகள் பலரும் இதுபோல் டான்ஸ் ஆடும்போது நான் மட்டும் முடியாது என சொல்ல முடியுமா?’ என்றார் ரெஜினா.

Related Stories: