×

கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு வரவில்லையே; நடிகை கலக்கம்

நடிகை லட்சுமிராய் ஹீரோயினாக அறிமுகமானார். சக நடிகைகளின் போட்டியை சமாளிக்க முடியாமல் கவர்ச்சி குத்தாட்டங்களில் நடிக்கத் தொடங் கினார். எப்போதாவது ஒருமுறை அவருக்கு முக்கியத்துவம் தரும் வேடங்கள் வருகின்றன. அந்தநேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகள் ஒரு பாடலுக்கு குத்தாட்ட ஆடும் வாய்ப்பாகவே இருக்கிறது. ‘எண் கணித ஜோதிடப்படி பெயரை ராய் லட்சுமி என்று மாற்றுங்கள் அதன்பிறகு பாருங்கள் நீங்கள் டாப்புக்கு போய்விடுவீர்கள்’ என்று சிலர் ஆசை காட்ட அவரும் தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

பெயர்தான் முன்னுக்கும் பின்னுக்கும் நகர்ந்ததே தவிர லட்சுமிராய்க்கு வாய்ப்பு எதுவும் கொட்டவில்லை. ஆனால் ஒரு விஷயம், பெயர் மாற்ற சம்பவத்துக்கு பிறகு இந்தியில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தியில் ஜூலி 2ம் பாகத்தில் படுகவர்ச்சியாக நடித்தார் ராய்லட்சுமி. எதிர்பார்த்தளவுக்கு அப்படம் வெற்றிபெறவில்லை. இதனால் சோர்ந்துபோனார். வரும் வாய்ப்புகள் பலவற்றை நழுவவிட்டுக்கொண்டிருக்கிறார்.

பெரியதாக வாய்ப்பு வந்தால் கொத்துவதற்காக இப்படி கொக்குபோல் காத்திருக்கிறாராம். எது எப்படி இருந்தாலும் தனது உடற்கட்டை அவர் சிக்கென வைத்திருப்பதை அவ்வப்போது இணைய தளத்தில் நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு நிரூபித்து வருகிறார். தற்போது ஆரஞ்ச் நிறத்தில் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்து அவர் நடந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு இளவட்டங்களின் கண்களை தன் மீது மொய்க்க வைத்திருக்கிறார்.

Tags : actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...